கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மதுரைக்கு அழைத்துச் சென்ற அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்(19) என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

Advertisment

16-year-old missing girl recused in madurai

கடந்த 14 ஆம் தேதி கார்த்திக்கோவை மைல்கல் பகுதியைச் சேர்ந்த 16 வயதுசிறுமியை அழைத்துக்கொண்டு திருப்பூர் சென்றுள்ளான். பின்னர் திருப்பூரிலிருந்து சென்னைக்கு15 ஆம் தேதி கிளம்பி சென்றுவிட்டு அன்றிரவு , சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் செல்லும்போது, சந்தேகத்தின் பேரில் விசாரித்த நிலையில், ரயில் பயணச்சீட்டு பரிசோதகரிடம் இருவரும் சிக்கினர். தொடர்ந்து இருவரையும் ஆரப்பாளையத்தில் பிடித்து வைத்திருந்தது தொடர்பாக கோவை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதனையடுத்துஅங்கு சென்ற கோவைகுனியமுத்தூர் போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்ததுடன், சிறுமியையும் மீட்டனர்.