Advertisment

தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 16 வயது சிறுமி கைது

A 16-year-old girl was arrested for serial vehicle theft

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது.

Advertisment

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி என்பது தெரியவந்தது. இவர் இருசக்கர வாகனங்களை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சென்னையில் பல இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதும், திருடப்படும் வாகனங்களில் உள்ள பெட்ரோல் தீர்ந்தவுடன் விட்டு விட்டு செல்வதையும் வழக்கமாக வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்ட சிறுமி புரசைவாக்கம் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

Chennai police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe