Advertisment

16 வயது சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை! - 5 பேர் கைது!

thiru

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் பயணித்த சென்ற போது விக்கி என்கிற இளைஞன் சந்தியாவிடம் நெருங்கி பழகி உள்ளான்.

Advertisment

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தியாவை விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகில் ஒரு தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி அங்கு வைத்து, ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளான். மேலும் அவற்றை மொபைல் வீடியோவில் படம்பிடித்து வைத்துக் கொண்ட விக்கி அதை வைத்து மிரட்டி சிறுமியிடம் அடிக்கடி முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இதை தெரிந்து கொண்ட அவனது நண்பர்கள் சிலர் தமக்கும் சந்தியாவை விருந்தாக்க கேட்டுள்ளனர். அதனால் சிறுமியை திருக்கண்ணூர் என்ற இடத்தில் அடைத்திற்கு அழைத்து சென்ற விக்கி, அங்கு அடைத்து வைத்து, மிரட்டி தனது நண்பர்களுடன் சிறுமி சந்தியாவை கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்த போதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தெரியவந்தது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் புதுச்சேரி திருக்கணூர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். ஆனால் அந்த காவல்நிலைய போலீசார், சம்பவம் நடந்த இடம் தமிழகத்தில் உள்ள வழுதாவூர் பகுதி என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் எங்கு புகார் செய்வதென்று தவித்த சிறுமியின் குடும்பத்தினர் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் புகார் கூறினர். குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் சிறுமியிடம் நடந்த சம்பவங்களை விசாரித்து பதிவு செய்து கொண்டபின் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை முதலில் சீரழித்த விக்கியையும், கூட்டு பாலியல் வன்புணர்ச்சியில் தொடர்புடைய விக்கியின் நண்பர்கள் 7 பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி எல்லை பகுதியில் பதுங்கியிருந்த சிறுமியின் காதலன் விக்கி, அவனது நண்பர்கள் முகிலன், கண்ணதாசன், சூர்யா, தேவா ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை 17 பேர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூர நிகழ்வின் காயம் ஆறுவதற்குள் புதுச்சேரியில் 16 வயது சிறுமியை 8 பேர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி கொடூரம் நிகழ்த்தியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Child abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe