Advertisment

இன்ஸ்டாகிராமில் காதல்; 16 வயது சிறுமி மரணம்!

16-year-old girl lost their life after Instagram boyfriend doesn't talk to her

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச்சேர்ந்தவர் கலீல் அகமது. இவரது மனைவி சைரன் பானு (40). இந்தத்தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் இன்ஸ்டாகிரம் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் அந்த இளைஞர் சிறுமியிடம் கடந்த 4 நாட்களாக பேசாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமி மன உலைச்சலில் இருந்திருக்கிறாம். இந்த நிலையில்தான் நேற்றும் முன் தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

trichy police instagram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe