சட்டம் என்னதான் கடுமை காட்டினாலும்,ஒருசிலகிராமங்களில் தீண்டாமை தலைவிரித்தாடவே செய்கிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிதாலுகா,சொக்கனேந்தல்கிராமத்திலும் 16 வயது சிறுமிக்கு எதிராக வன்கொடுமை நடந்திருக்கிறது.
பட்டியலினத்தைச் சேர்ந்த அச்சிறுமி காலை 10-30 மணியளவில் கடைக்குச் சென்றபோது, வேறொரு பிரிவைச் சேர்ந்தஅருண்பாண்டிஎனும் நபர் பின்தொடர்ந்து வலுக்கட்டாயமாக அச்சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவனிடம் இருந்து தப்பிய அச்சிறுமி வீட்டுக்குச் சென்று தனது அண்ணன் பிரகாஷ்ராஜிடம் அழுதபடியே நடந்ததைச் சொல்லியிருக்கிறார்.
உடனே, பிரகாஷ்ராஜ்அருண்பாண்டியிடம்இதுகுறித்துகேட்டுள்ளார். அப்போதுஅருண்பாண்டி, சாதியைச் சொல்லித் திட்டியபடி பிரகாஷ்ராஜை அடித்திருக்கிறார். அருண்பாண்டியனின் தந்தை ராஜாங்கமும்பிரகாஷ்ராஜைதாக்க, அருண்பாண்டியனின் அக்கா பஞ்சு, சிறுமியின் கன்னத்தில் அறைந்து, தலைமுடியைப் பிடித்து இழுத்து ‘என் தம்பிசொல்றதகேட்கலைனா..உங்கவீட்டுக்கு தீ வைத்து குடும்பத்தோடுகொளுத்திருவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அந்தச் சிறுமிகாரியாபட்டி எ.முக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்,அருண்பாண்டி, ராஜாங்கம், பஞ்சு ஆகிய மூவர் மீதும்போக்சோமற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.