16-year-old girl gave birth to a baby girl

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சிறுமிக்கு மதிய இடைவேளையின் போஹ்டு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலியால் அலறித் துடித்த மாணவியை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக கொண்டுச் சென்றனர்.

Advertisment

மருத்துவமனையில் மாணவியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. மேலும் பிரசவ வலி காரணமாகவே மாணவிக்கு வலி ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அவரை பிரசவ வார்டில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், மாணவியின் உறவினர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி மாணவியை கர்ப்பமாக்கி இருப்பது தெரியவந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் மாணவியின் உறவிரை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.