16 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... புதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்!

தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தில்லை நடராஜன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு இரண்டாவது பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 16 IPS officers transferred ...

மேலும் அந்த அறிவிப்பின்படி, பாஸ்கரன் எஸ்பியாக பதவி உயர்வுபெற்று மதுரை மாநகர தலைமையகத்தினுடைய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கியூ பிரான்ச் எஸ்பியாக மகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கியூ பிரான்ச் எஸ்பியாக இருந்த தர்மராஜன் தற்போது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டத்தின் எஸ்பியாக சுகுணா சிங், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக கண்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக பி.விஜயகுமார், கள்ளக்குறிச்சி எஸ்பியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Chengalpattu IPS transfered Tamilnadu Vellore Vellore District Ranipettai melvelam
இதையும் படியுங்கள்
Subscribe