Advertisment

16 மணி நேர வேலை: 50 ரூபாய் சம்பளம் - 4 வருடங்களாக சிக்கித்தவித்த கொத்தடிமைகள் மீட்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை அருகேயுள்ளது மார்தாண்டகுப்பம். அங்கு செயல்பட்டு வந்த அரிசி ஆலையில் கொத்தடிமைகள் 15 பேர் உள்ளதாக வேலூர் உதவி ஆட்சியர் மெகராஜ்க்கு புகார் வந்தது. அதன்படி அடிப்படையில் அதிகாரிகள் திடீரென சென்று மே 28ந் தேதி காலை விசாரணை நடத்தினர்.

Advertisment

16 hour job: 50 rupees salary - bonded laborers recovered

விசாரணையில், ஆந்திரா மாநிலம் கே.பி.ஆர் புரத்தை சேர்ந்த குமாரி, அவரது மகன்கள் சரவணன், நாகராஜன், சரவணன் மனைவி சோனியா, அவர்களது 7 மற்றும் 5 வயதேயான இரு குழந்தைகள், ராஜேந்திரன், அவரது மனைவி சுதா அவர்களது 5 வயது மகன், ராஜேந்திரனின் இரண்டாவது மனைவி சுகுணா இந்த தம்பதியில் 3 வயது மகன் சுரேஷ், சாந்தியின் மற்றும் அவரது ஒன்றரைவயது மகன் என அந்த அரிசி ஆலையில் 9 பெரியர்கள், 6 சிறியவர்கள் என 15 பேர் கொத்தடிமைகளாக இருந்துள்ளனர்.

Advertisment

மேலும் அவர்கள், 4 ஆண்டுகளுக்கு முன்பு 50 ஆயிரம் ரூபாய் எங்கள் இரண்டு குடும்பமும் சேர்ந்து கடன் வாங்கியது. அந்த தொகைக்காக எங்களை அழைத்து வந்து வேலை வாங்குகிறார். எங்கள் பிள்ளைகளை படிக்ககூட அனுப்புவதில்லை. நாங்கள் எப்போது கேட்டாலும் நீ செய்யற வேலைக்கு தருகிறசம்பளம் அதிகம்'னு சொல்லுவார். 4 வருசமா வேலை செய்யறோம், இப்போ வரை கடன் அடையள என்றுள்ளார்கள்.

இவர்கள் வாங்கிய தினக்கூலி தனி நபருக்கு 50 ரூபாய் என்கிறார்கள் அதிகாரிகள். ஒருநாளைக்கு 16 மணி நேரம் உழைக்க வேண்டும், அங்கே அமைத்து தந்துள்ள கொட்டைகையிலேயே தங்கயிருக்க வேண்டும் என்பது உத்தரவு போன்றவற்றை கேட்டு அதிர்ச்சியாகியுள்ளனர். அவர்களை அங்கிருந்து மீட்டு, சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து, உதவித்தொகை வழங்கிய அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அரசி ஆலை அதிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய காவல்துறைக்கு புகாரை அனுப்பியுள்ளார்கள்.

Recovered bonded laborers Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe