தமிழ்நாட்டின் முதல் நகராட்சி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நகராட்சியாகும். ஆற்காடு நவாப்களின் கட்டுப்பாட்டில் இருந்து, இந்த பகுதிகள் ஆங்கிலேயர் வசமானது. 1866ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வாலாஜாபேட்டை நகராட்சியை உருவாக்கினர்.
1960ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில்தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உட்பட பல பெருந்தலைவர்கள் வருகைதந்து விழாவை சிறப்பித்தனர்.
2020ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி 154 ஆண்டை தொடங்கியுள்ளது இந்நகராட்சி. அதனை கொண்டாடும் விதமாக நகராட்சி ஆணையர் சதிஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.