Skip to main content

153-வது ஆண்டை தொட்ட வடலூர் வள்ளலார் சுத்த சன்மார்க்க தருமசாலை!

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் அவர்கள் தோற்றிவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 153- வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.



சத்திய ஞான சபையில் வழிபாடு செய்பவர்கள் புலை,கொலை தவிர்த்தவராக இருக்க வேண்டும் என்பது வள்ளர்பெருமான் வகுத்த விதியாகும்.

 

 153-year-old opening ceremony of Samarasa Sutha sanmarka Sadhya Dhamamachalai by Vadalur Vallalar



அதன்படி திரு. அருட்பிரகாச வள்ளற்பெருமானார் வடலூரில் 23-05-1867 பிரபவ ஆண்டு வைகாசி மாதம் 11- ம் நாள் நிறுவி அருளிய சத்திய தருமச்சாலையின் 152- வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 153- வது ஆண்டு துவக்க விழா நடைபற்று வருகிறது.

 

 


உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும், சாதி, மதம், மொழி, தேசம் முதலிய எந்தவித வேறுபாடுகளும், இல்லாத நிலையில், அனைவரும் பிராத்தனை செய்யும் முறையில் சத்திய ஞான அமைந்துள்ளது. அதனாலையே இங்கு இறைவன் அனைவருக்கும் ஜோதி வடிவாய் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

 

 153-year-old opening ceremony of Samarasa Sutha sanmarka Sadhya Dhamamachalai by Vadalur Vallalar



பசியை பிணியாக கருதிய வள்ளலார் அவர்கள், பசித்து வருவோர்க்கு உணவு அளித்திட சத்திய தர்மசாலையை நிறுவி அன்னதானம் வழங்க அணையா அடுப்பையும் ஏற்றி வைத்தார். அந்த அணையா அடுப்பு இன்றுவரை அன்னதானத்தை வழங்கி வருகிறது. 

 



பசித்திரு, தனித்திரு, விழித்திரு எனவும் அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கின்ற உன்னதமான மஹா மந்திரத்தை அருளி சென்றுள்ள வள்ளல் பெருமானை உலகெங்கிலும் உள்ள வள்ளற்பெருமானின் அடியார்களும், பக்தர்களும் வந்து தரிசித்து செல்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சத்திய ஞான சபைக்கு  20 ஆண்டுகளாக 10 டன்னுக்கு குறையாமல் உதவி; நெகிழ வைக்கும் இஸ்லாமியர் 

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Aid not less than 10 tons for 20 years to Sathya Gnana Sabha; A resilient Muslim

கடலூர் மாவட்டம்  வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் தர்மசாலைக்கு 10 டன் காய்கறி மற்றும் அரிசி, குடிநீர் பாட்டில் என இஸ்லாமியர் ஒருவர் வழங்கி வரும் சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக வாழ்ந்த வள்ளலார், பசித்திரு தனித்திரு விழித்திரு என்ற கொள்கையின்படி இருந்தவர். அவர் வடலூரில் அமைத்த சத்திய ஞான சபை தர்ம சாலையில், 3 வேலையும் பல்லாயிரக்கணக்கானோர் உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், 153-வது தைப்பூச ஜோதி தரிசன விழா ஜன 25ம் தேதி நடைபெறுவதையொட்டி, கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் தர்மசாலைக்கு 10 டன் காய்கறிகள் மற்றும் 25 கிலோ  கொண்ட 50 அரிசி மூட்டைகளையும், 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும், சரக்கு வாகனம் மூலம் தர்மசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vck ad

இது குறித்து  கூறிய பக்கிரான், வடலூர் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக 10 டன்களுக்கு குறைவில்லாமல் காய்கறி,அரிசி மூட்டைகள் அனுப்பி வருவதாகவும், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கொள்கையையொட்டி வருடாவருடம் இந்த பொருட்களை அனுப்பி வருவதாக தெரிவித்தார்.

இஸ்லாமியரான பக்கிரான், மதங்களை கடந்து உணவுப் பொருட்களை இந்து சமய நெறி வழிபாட்டை கடைப்பிடிக்கும் வள்ளலார் சபைக்கு வழங்கி வருவது மதங்களை கடந்த மனிதம் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.