
150 பவுன் திருடிய வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்த ஈரோடு டி.எஸ்.பி உட்பட 14 போலீசாருக்குபாராட்டுகுவிந்து வருகிறது.
ஈரோடு பழையபாளையம் கணபதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி வீட்டில் 150 பவுன் தங்க நகை ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி கொள்ளை போனது. சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர். இதில், 2 ஆயிரம் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், ஆயிரக்கணக்கான பழங்குற்றவாளிகள் நடத்தைகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (22) என்ற வாலிபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடிக்க ஈரோடு போலீசார் 2 முறை ஆந்திரா மாநிலம் சென்று திரும்பினர். இறுதியில் கடந்த 1ம் தேதி ஆந்திராவில் பதுங்கியிருந்த ஆனந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தவழக்கில் குற்றவாளியைகண்டுபிடித்த ஈரோடு டி.எஸ்.பி உட்பட 14 போலீசாருக்குபாராட்டுகுவிந்து வருகிறது.
Follow Us