Advertisment

இரவில் தூங்கச் சென்ற பெண்ணுக்கு காலையில் காத்திருந்த அதிர்ச்சி

1.50 lakh cash was stolen by breaking lock of  female house

ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரம் கே.டி.கே. தங்கமணி வீதியைச் சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(36). இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஜோதிலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதிலட்சுமி கட்டட வேலை பார்த்து வருகிறார். ஜோதிலட்சுமி வீட்டின் அருகே அவரது தாய் வீடும் உள்ளது.

Advertisment

தினமும் இரவு ஜோதிலட்சுமி மற்றும் அவரது மகன்கள் அருகில் இருக்கும் தாய் வீட்டில்தூங்குவது வழக்கம். நேற்று இரவும் ஜோதிலட்சுமி தனது மகன்களுடன் அருகில் இருக்கும் தாய் வீட்டுக்கு தூங்கச் சென்று விட்டனர். இன்று காலை ஜோதிலட்சுமி எழுந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையின் பீரோ திறக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டுமொபட்டில் ஒரு மொபட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து சூரம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கை ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர்.

இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Erode Theft woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe