bothai

திருவள்ளூரில் 15 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த அவரது 25 நண்பர்களில் ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

திருவள்ளூரைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதிகமாக ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அந்த மாணவி மது மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

மாணவியின் போதைப் பழக்கத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு காலகட்டத்தில் தனித் தனியாக அவரது 25 நண்பர்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை மிகவும் தாமதமாக அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவியை கடுமையாக கண்டித்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அந்த மாணவி அவர் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து செய்வது அறியாத பெற்றோர், மாணவி போதைக்கு அடிமையானது குறித்து அவரது தவறான நண்பர்கள் குறித்தும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின் மாணவியின் நண்பர்களில் ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மாணவியின் மற்ற நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.