Advertisment

15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை; போக்சோவில் இளைஞர் கைது

A 15-year-old girl incident; Youth arrested in POCSO

காரைக்காலில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தஇளைஞரைபோலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Advertisment

காரைக்கால் அடுத்துள்ள தோமாஸ்அருள்திடல் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் திருமலைராயன்பட்டினம் என்னும் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்பபோது அதேபகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியிடம் பேசி பழகிய மணிவண்ணன், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

அடிக்கடி மணிவண்ணன் வீட்டுக்கு வருவதை அறிந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரித்ததில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை சிறுமி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியான நிலையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் மணிவண்ணன் கைது செய்யப்பட்டான்.

Karaikal POCSO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe