
சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த நான்கு வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, கடும் வயிற்று வலியால் அழுதுள்ளார். இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் 9ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவன், தான் வீட்டில் தனியாக இருந்தபோது, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறினாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.