Advertisment

29 வயது பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்... 15 வயது சிறுவன்  கைது! 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் நகர். இங்கு வசிக்கும் 29 வயது திருமணமான பெண் ஒருவர் நேற்று முன்இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார். அவர் செல்வதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் அவரை வழி மறித்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளான். அவனிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்த அந்தப் பெண் நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கூறியுள்ளார்.

Advertisment

15-year-old boy arrested in cuddalore

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதையடுத்து அந்தப் பெண் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறுவன் மீது புகார் அளித்தார்.போலீசார் விசாரணை செய்து அதன் மூலம் சம்பவம் நடந்ததை உறுதி செய்தனர். அதையடுத்து அந்தச் சிறுவனை கைது செய்த போலீசார் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்தனர். 29 வயது பெண்ணை 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதிபெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Cuddalore police Sexual Abuse
இதையும் படியுங்கள்
Subscribe