15 year land dispute ... Exciting nellai

நெல்லையில் நிலத்தகராறில் பெண் உள்ளிட்ட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த நாஞ்சாங்குளத்தை சேர்ந்த மரியராஜ் குடும்பத்திற்கும் அழகர்சாமி என்பவரது குடும்பத்திற்கும் இடையே நிலபாகப்பிரிவினை தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்துள்ளது. நிலத்தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்தில் அழகர்சாமி குடும்பத்தினர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மரியாஜ் குடும்பத்தினர் ஆள் துளையிடும் பணிகளை தடுத்துள்ளனர்.

15 year land dispute ... Exciting nellai

அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக உருவானது. அப்பொழுது அழகர்சாமியின் மகன்கள் சுந்தரபாண்டி, மணிகண்டன் மற்றும் அவரது தரப்பினர் மரியாஜ் குடும்பத்தினரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் மரியாஜ், ஜெசுராஜ், வசந்தா ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுந்தரபாண்டிய, மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நெல்லையைபரபரப்பிற்குஉள்ளாக்கியுள்ளது நிலப்பிரச்சனையால் ஏற்பட்டஇந்த கொலை சம்பவம்