'15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்'- தமிழக அரசு அறிவிப்பு!

 '15 Special Medals for Police Officers'  - Government of Tamil Nadu announcement!

75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை தமிழக அரசு அறிவுத்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி, காவல்துறை செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அமல்ராஜ், சென்னை காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் விமலா, சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பிரேம் பிரசாத், திருச்சி கோட்டை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு ஆய்வாளர் நாவுக்கரசன் ஆகிய ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படவிருக்கிறது.

காவல் ஆய்வாளர்கள் செல்வி, சாந்தி, ரவி, சாயிலட்சுமி, அமுதா, சந்தான லட்சுமி, சீனிவாசன், கனகசபாபதி, வடிவேல், ஆனந்தலட்சுமி ஆகியோருக்கு காவல் பதக்கம் வழங்கப்படவிருக்கிறது.

independence day. tn govt
இதையும் படியுங்கள்
Subscribe