ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

nn

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில்எல்லை தாண்டி மீன் பிடித்ததாகத்தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டிய சம்பவமும், கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்து வந்த நிலையில், தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக 15 பேரைக் கைது செய்துள்ளதாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fisherman Rameshwaram
இதையும் படியுங்கள்
Subscribe