15 pound jewelery robbery at farmer's house!

Advertisment

திருச்சி, உப்பிலியபுரம் தம்மம்பட்டி சாலையில் மங்கப்பட்டி புதூரில் வசிப்பவர் தமிழரசன்(60). விவசாயியான இவருக்கு செல்வராணி (58), கலா (50) ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். இருவரும், செங்கட்டு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியைகளாக பணி புரிந்து வருகின்றனர்.

தமிழரசன் தோட்டத்திற்கு சென்றதையடுத்து, செல்வராணி, கலா இருவரும் வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். மூவரும் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.