
நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே கன்னிமாரான் தோப்பு ஓடை பகுதியில் குளிக்கச் சென்ற 15 பேர் அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்சிக்கிக்கொண்ட நிலையில்அனைவரையும் மீட்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே கன்னிமாரான் ஓடை அமைந்துள்ளது. இதனை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் சில தினங்களாகவே கனமழை பொழிந்து வந்த நிலையில் இன்று மிக அதிகமாக கனமழை பொழிந்ததால் அவ்வோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல் அனுமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நீர்வரத்து மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் இன்று 3:30 மணியளவில் 50 நபர்கள் ஓடை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 35 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 பேரை மீட்பதற்குள் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தது. இதனால் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடனே அவர்களை மீட்க முடியும் என்பதால் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு வீரர்கள் கயிறுகள் மூலம் 15 பேரைமீட்பதற்காக போராடி வருகின்றனர்.
Follow Us