/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_44.jpg)
சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் செவிலியர் விடுதியில் திங்கள் கிழமை காலை உணவில் அரணை கிடந்ததாகவும், அதனை தெரியாமல் சாப்பிட்ட மாணவிகள் 15 பேருக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சக மாணவிகள் அவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத்தொடர்ந்து செவிலியர் மாணவிகள் அனைவரும் ஊர்வலமாகச் சென்று துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதியை சந்தித்து இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினர். இதன் பேரில் முதல்வர் திருப்பதி சம்பந்தப்பட்ட விடுதி உணவு ஒப்பந்ததாரரை நீக்கம் செய்து விட்டதாகவும், இனிமேல் உணவில் எந்த குறைபாடும் இல்லாமல் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
உணவில் அரணை கிடந்தது என்ற தகவல் ஒவ்வாமையால் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் நல்லமுறையில் உள்ளதாக முதல்வர் கூறினார். இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)