சாராய ஊறல் நீர் குடித்த 15 ஆடுகள் உயிரிழப்பு

சாராய ஊறல் ஊறல் நீரை குடித்த 15 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.ஊரடங்கு காரணமாகடாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.

 15 Goats Drank Alcohol Water

இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு பக்கமிருக்க டாஸ்மாக் மூடப்பட்டதால் வேறு விதமான பொருட்களை பயன்படுத்தி போதைஏற்றிக்கொள்ள முயற்சி செய்து, அதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற குற்றச்சம்பவங்களும்நடந்துவருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மேலேறிகொட்டாய் மலையில் சாராய ஊறல் நீரை குடித்த பெருமாள் என்பவரின் 15 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சாராயம் காய்ச்சிய பின் விட்டுச்சென்ற ஊறல் நீரை ஆடுகள் குடித்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

fake liquor goat animal krishnakiri
இதையும் படியுங்கள்
Subscribe