15 அடி ஆழ திடீர் பள்ளத்தாள் பரபரப்பு..! 

15 feet deep abyssal agitation ..!

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டகீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வடக்கு வீதியில் உள்ள விவசாயி அன்பு. இவரது வீட்டின் அருகில் வீதியில் தார்ச்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இதே சாலையில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம் போன்று ஏற்பட்டது. அப்போது திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுத்தார். மேலும் அதே போல தற்போது ஏற்கெனவே மூடப்பட்ட பள்ளத்தின் அருகிலேயே மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பள்ளமா அல்லது வரகு குழி என்கிற முன்னோர்கள் பயன்படுத்திய தானிய சேமிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வரகு குழியா என பொதுமக்கள் மத்திய பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், திடீர் பள்ளம் ஏற்படுவது ஒருபுறம் ஆச்சரியத்தையும் இன்னொருபுறம் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், கால்நடைகள் திடீர் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது என்றும் இந்த குழி, 15 அடிக்கும் அதிகமான ஆழம் மற்றும் 10 அடிக்கும் மேலான அகலத்திற்கும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Ariyalur
இதையும் படியுங்கள்
Subscribe