
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகிரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை (20.04.2021) முதல் இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தேர்வுகளை மத்திய மாநில அரசுகள் ஒத்திவைத்து வருகின்றன. தமிழகத்தில் கூட 12ஆம் வகுப்பு தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் தேர்வும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடத்த வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் இன்று காலை வெளியான நிலையில், இதுதொடர்பாக தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)