Advertisment

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்!

கணவர் நடராஜனின் மறைவை அடுத்து சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம்.

Advertisment

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் நள்ளிரவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 16-ம் தேதி, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்த இடங்களில் நோய் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து நள்ளிரவு 1 மணி 35 நிமிடத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, பெசன்ட் நகரில் அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காலை 11.30 மணியளவில் அவரது சொந்த ஊரான தஞ்சைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

Advertisment

இந்நிலையில், நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம். பரோல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூருவிலிருந்து தஞ்சை செல்கிறார் சசிகலா.

M Natarajan sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe