ADVERTISEMENT

“15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” - நயினார் பாலாஜி நில முறைகேடு குறித்து அமைச்சர் உறுதி

08:14 PM Jun 26, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தனி துணை ஆட்சியர்கள் ஆகியோரின் மே மாதத்திற்கான பணி சீராய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி 100 கோடி மதிப்பிலான இடத்தை முறைகேடாக தனது பெயரில் பதிவு செய்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து அவர் பதிலளிக்கையில், “இந்த புகார் தொடர்பான நிலம் இரண்டு இடங்களில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பிறகு பதிவுத்துறை மண்டல துணை தலைவர்கள் மூலம் இன்னும் 15 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT