ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா, குடியரசுத் தின விழா நாளில், உலக பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழ வீதி கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
கோயில் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் 142 அடி உயர உச்சியில் தேசிய கொடியை ஏற்றினர். குறிப்பாக, கோயில் கோபுரத்தில் 147வது முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேசியக்கொடி கோபுரத்தில் ஏற்றப்பட்டவுடன் பக்தர்களுக்கு நடராஜர் கோவில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.