Advertisment

சிதம்பரத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டது!

144 restraining orders imposed in Chidambaram revoked!

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட தீட்சிதர்கள் தடை விதித்ததையொட்டி பல்வேறு சமூக அமைப்புகள் எப்போதும்போல் கனகசபையில் வழிபட அனுமதிக்க வேண்டுமென தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் சம்பந்தமாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பதில் வரும் வரை யாருக்கும் போராட, ஒரு மாத காலத்திற்கு அனுமதி இல்லை எனவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

Advertisment

இந்நிலையில், அனைவர் மத்தியிலும் உரிமைக்கு போராடினால் 144 தடை உத்தரவா? மாவட்ட நிர்வாகம் தீட்சிதர்களுக்கு ஆதரவா? என சமூகவலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோட்டாட்சியர் ரவி, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படியும், பொதுமக்கள் நலன்கருதி சிதம்பரத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

Advertisment

Chidambaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe