தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

144 prohibitory order in Tuticorin!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 14 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் குல தெய்வமான வீர சக்தி ஆலய திருவிழா 12 மற்றும் 13 ஆம் தேதியில் நடைபெறுகிறது. இதன் காரணமாக எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்தத்தடை உத்தரவின் காரணமாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குத்தரிசனம் செய்ய வரும் நபர்கள் கைகளில் வாள், கத்தி, கம்புகள் போன்ற ஆயுதங்கள் எதையும் கொண்டு செல்லக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 144 தடை உத்தரவின் காரணமாகப் பள்ளி, கல்லூரி, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe