Advertisment

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்

144 prohibitory order imposed In kampam

Advertisment

கம்பம் நகருக்குள் அரிக்கொம்பன் யானை உலாவி வருவதால்மக்கள் பாதுகாப்பு மற்றும் யானையின் நலன் கருதி கம்பம் நகருக்கு 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

கேரளா வனப்பகுதியில் இருந்து கம்பம் நகருக்குள் நுழைந்த அரிகொம்பன் யானை நகரில் பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்து மக்களை விரட்டி வந்தது. இந்த விஷயம் தொகுதி எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணனுக்கு தெரியவே, அந்தப் பகுதிகளுக்குச் சென்று மக்களை உஷார்படுத்தியதுடன் மட்டுமல்லாமல் வனத்துறை அமைச்சருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்துவனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி அரிகொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வெளி நபர்கள் கம்பம் நகருக்குள் நுழையவும்தேனி மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு போட்டுள்ளது. அதேபோல் கம்பம் நகருக்கு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

kampam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe