தஞ்சை நாடாளுமன்ற தொகுதி சுயட்சை வேட்பாளர் செல்வராஜ் சார்ந்துள்ள இன பெண்களை இழிவாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி மகன் கருப்பன் என்பவர் தான் சார்ந்துள்ள இன பெண்களை இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் போராட்டங்கள் நடக்கும் என்று பொன்னமராவதி காவல் நிலையத்தில் 18 ந் தேதி மதியம் 2 மணிக்கு புகார் கொடுத்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொடர்ந்து இரவு 9 மணிக்கு பிறகு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுமார் ஆயிரம் பேர் ஊர்வலமாக காவல் நிலையம் செல்லும் போது அப்பகுதி கடைகளின் பெயர் பலகைகளை சேதப்படுத்தியதாக வணிகர்கள் சாலை மறியல் செய்தனர். தொடர்ந்து ஊர்வலமாக சென்றவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் இரவு முழுவதும் பதற்றமாக இருந்தது. போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொடர்ந்து 19 ந் தேதி காலை பொன்னமராவதி சுற்றியுள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மரங்களை சாலையில் சாய்த்து போக்குவரத்தை முடக்கியதுடன்பெண்கள் துடைப்பம், செப்பலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே போல பொன்னமராவதி பேருந்துநிலையம் முற்றுகையிடப்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தடியடி கல்வீச்சு சம்பங்கள் நடந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்து பலர் காயமடைந்தனர். அதனால் இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் 21 ந் தேதி மதியம் வரை 144 தடை உத்தவை பிறப்பித்தார்.
அதனால் பொன்னமராவதி பகுதியில் போராட்டம் கட்டுக்குள் வந்த நிலையில் அன்னவாசல் மற்றும் கட்டியாவயல் பகுதியில் போராட்டம் தொடங்கியுள்ளது. அன்னவாசல் பகுதியில் வந்த பேருந்துகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பாகநிறுத்தப்பட்ட நிலையில் கட்டியாவயலில் 3 பேருந்துகள், ஒரு லாரி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கும் போலிசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல தஞ்சை மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திலும் போராட்டம் நடந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது சம்மந்தமாக ஆடியோவில் பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அந்த மக்களும்.. வழக்கு பதிவு செய்தாகிவிட்டது. ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யும் முயற்சி நடக்கிறது. ஆனால் அதற்குள் போராட்டங்கள் தொடர்வதால் கைது நடவடிக்கையில் தொய்வு ஏற்படுகிறது. போராட்டம் நடத்தும் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தை கைவிட்டால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்கின்றனர் போலிசார்.