தென்காசியில் தடை உத்தரவை மீறி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொன்னதால் போலீசார் தாக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி தொழுகையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 300 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் தென்காசியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று பிற்பகல் தொழுகைக்காக சுமார் 400 பேர் கூடினர்.
தகவலறிந்து போலீசார் அங்கு சென்று கூடியிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். அப்போது அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இச்சம்பவத்தில் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடி வேல் உள்பட 4 போலீசார் காயமடைந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது, பள்ளிவாசலில் ஆதிகளவில் கூட்டம் கூடியது தொடர்பாக வட்டாட்சியர் ஆமிர்தராஜ் அளித்த புகாரின்பேரில் 300க்கும் மேற்பட்டோர் மீது நேற்றிரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து தென்காசி முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.