சென்னை காசிமேடு ஜீவரத்தினம் சாலையில், அப்பகுதி மக்கள் 144 தடையும் மீறி நேற்று இரவு 7 மணிக்கு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எம்.சி ரோட்டில் உள்ள சமூக நலக்கூடத்தில் கரோனா தடுப்பு முகாம் அமைத்து, கப்பல் மூலமாக வந்த வெளிநாட்டினருக்கு சிகிச்சை அளிப்பதாக வந்த தகவலால்அதிர்ச்சியடைந்தமக்கள் அங்கு திரளாகபோராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் வட சென்னை முழுக்க எந்த கரோனா பாதிப்பு இல்லாமல் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா, கரோனா நோயை இங்கேயும் கொண்டு வரவேண்டும் என்பதுதான்உங்கள் திட்டமாக இருக்கிறதோ, அதற்குதான் நீங்கள் இங்கு சிகிச்சை கொடுக்க போகிறீர்களா என்று போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
அது போன்று எதுவுமில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்திய நிலையில்போராட்டத்தில் ஈடுபட்டமக்கள் கலைந்து சென்றனர்.