ரூ.73 லட்சம் மதிப்புள்ள 1,422 கிராம் தங்கம் பறிமுதல்; இருவரிடம் விசாரணை

1,422 grams of gold worth Rs 73 lakh - Investigation by two

துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 40) என்பவர் தனது சட்டையில் 1,173 கிராம் எடை கொண்ட தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

அதேபோன்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம் சோதனையிட்டதில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 34) என்பவர் தனது ரோலர் சூட்கேசில் 249 கிராம் தங்கத்தை மறைத்து வைத்துக் கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களிடம் இருந்த 1,422 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 72,92,016 ஆகும்.

airport trichy
இதையும் படியுங்கள்
Subscribe