Advertisment

மாணவியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது

14 year old girl child missed youth arrested under pocso

திருச்சியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் கண்டோன்மெண்ட் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் கேஷியராக பணிபுரியும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன்(21) என்பவர் மாணவியை அழைத்து சென்றது தெரியவந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், மணப்பாறை அயன்புரம் பகுதியில் பள்ளி மாணவியுடன் மகேந்திரன் தங்கி இருந்தது தெரியவந்தது. அங்கிருந்து மாணவியை மீட்டகண்டோன்மெண்ட் மகளிர் காவல்துறையினர் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

POCSO trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe