Advertisment

பைக்கை இயக்கிய 14 வயது சிறுவன்; கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த சோகம்

14-year-old boy lose their live while riding bike

சென்னை பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை 14 வயது சிறுவன்இயக்கியதால்ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரியன். தன்னுடைய நண்பர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வண்டலூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பிரியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மற்ற இரண்டு சிறுவர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுஅவர்களுக்கு சிகிச்சையானதுநடைபெற்ற வருகிறது

Advertisment

அண்மையில் இதேபோல் வடபழனியில் சிறுவன் ஒருவன் தந்தையின் அனுமதி இல்லாமல் காரை இயக்கியதில் விபத்து ஏற்பட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த சம்பவமும்தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

road accident Road Safety school children bike
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe