
சென்னை பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தை 14 வயது சிறுவன் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரியன். தன்னுடைய நண்பர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வண்டலூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பிரியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மற்ற இரண்டு சிறுவர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையானது நடைபெற்ற வருகிறது
அண்மையில் இதேபோல் வடபழனியில் சிறுவன் ஒருவன் தந்தையின் அனுமதி இல்லாமல் காரை இயக்கியதில் விபத்து ஏற்பட்டு முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த சம்பவமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.