Advertisment

புற்றுநோய்க்கு காரணியாகும் 'எத்திலீன் ஸ்ப்ரே' - கோயம்பேட்டில் 14 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்!

14 bananas seized in chennai Coimbate

காய்கறி,பழங்கள், பூக்கள் எனஅனைத்தும் மொத்த விற்பனை செய்யும் இடமான சென்னை கோயம்பேட்டில், தடைசெய்யப்பட்ட முறைப்படிவாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தொடர்பாக 14 டன்வாழைப்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னைகோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் இன்று (06.02.2021) காலைசென்னைஉணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாழைப்பழங்கள்எத்திலீன் ஸ்பிரேமூலம் பழுக்க வைக்கப்படுகிறது என்ற புகாரைஅடுத்து இந்த சோதனைநடைபெற்றது.எத்திலீன் ஸ்ப்ரேமூலம் வாழைப்பழங்களைப் பழுக்க வைப்பதுபுற்றுநோய் போன்ற உயிக்கொல்லி நோயைஏற்படுத்தும் அளவிற்குமிகவும் மோசமானதுஎன்றஆய்வறிக்கைகள் ஏற்கனவேஇருக்கும்நிலையில்,இப்படி சட்டவிரோதமாக எத்திலீன் ஸ்ப்ரேபயன்படுத்தி துரிதமாக வாழைப்பழங்களைப் பழுக்க செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.

Advertisment

மேலும்எத்திலீன் ஸ்ப்ரேமூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார்1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 14 டன்வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்களை அழிப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Food saftey banana COIMBEDU
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe