1.4 crore issue 4 people incident including a BJP executive

Advertisment

கடன் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி செய்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மாநில விவசாயஅணியின் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர், 70 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில், பாஜக மாநில விவசாயஅணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்படபோரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்தராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரிடம் இருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.