Advertisment

கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 134 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம்;  ஆட்சியர் நேரில் ஆய்வு! 

viruthasalam

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி.சாத்தமங்கலம் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில், சித்திரை செடல் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் உணவு வழங்கப்பட்டது. உணவை உண்டவர்களுக்கு திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 120-க்கும் மேற்பட்டோர்க்கு வாந்தி, பேதி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி நேரில் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து ஆறுதல் கூறினார். இது குறித்து ஊமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.

fainting fatigue vomiting Festival temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe