தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு போன்றவைஏறத்தாழ முடிவுபெற்று தற்போது தேர்தல் பிரச்சாரத்தில்கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம்தேர்தல்நடத்தை வழிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர்தீவிரவாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்நேற்று முன்தினம் (15.03.2021) வரை தமிழகத்தில் மட்டும் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட133 கோடி ரூபாய் மதிப்புடையபணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் 331 கோடி ரூபாய் மதிப்புடையபணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில்295 தேர்தல் செலவின பார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளதாகவும்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.