ஏப்ரல் 30- ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பு வழங்கி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள் (Lab Technician), 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm899666_0.jpg)
மேலும் 31/03/2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவதொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்.
அதேபோன்று, 30/04/2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EWb99UkXgAA_1dy.jpg)
இதனைத் தொடர்ந்து தற்பொழுது 1,323 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாகப் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்". இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)