தமிழகத்தில் மேலும் 1,303 பேருக்குத் தொற்று; 13 பேர் உயிரிழப்பு!

xி

தமிழகம் முழுவதும் இன்று 1,303 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 168 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 200க்கும் அதிகமான தொற்று பதிவாகி வந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 26,79,568 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,428 ஆக உள்ளது. இதன் மூலம் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 26,27,632 ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்று காரணமாக இன்று 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இதுவரை 35,796 பேர் கரோனா தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக தற்போது வரை 15,992 மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். இன்று மட்டும் 1.39 லட்சம் கரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4,86,03,749 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்று கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

VACCINE
இதையும் படியுங்கள்
Subscribe