திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் 13 வயது சிறுமியை மணந்து 2 ஆண்டாக குடித்தனம் நடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisment

மண்ணச்சநல்லூர் இளங்கண் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கும்,விழுப்புரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சிறுமியுடன் ரியாஸ் மண்ணச்சநல்லூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பம் நடத்தி வந்தார்.

child

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்நிலையில் சிறுமியின் கணவரும், அவரது குடும்பத்தினரும் திருச்சியில் ஒரு மருத்துவமனையை அணுகி சிறுமிக்கு டெஸ்ட் டியூப் முறையில் குழந்தை பெறுவதற்கு முயற்சித்ததாகவும், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தகவல் சைல்டு லைனுக்கும், மாவட்ட சமூகநலத்துறைக்கும் புகாராக சென்றது. புகாரின் பேரில் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

அதன்படி மண்ணச்சநல்லூர் போலீசார் நேற்று சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு சமூகநலத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சிறுமி திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு மூலமாக அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.