Advertisment

13 வயது சிறுமி கடத்தல்; வாலிபர் போக்சோவில் கைது

13-year-old girl; Teenager arrested in Pocso!

சேலம் அருகே, 13 வயது சிறுமியை காதல் ஆசை கூறி, கடத்திச்சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், கெங்கவல்லி நரிப்பாடி அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன். இவருடைய மகள் அகானா (வயது 13, தந்தை மற்றும் மகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). சிறுமி அகானா, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் உள்ளூரைச் சேர்ந்த கார்த்திக் என்கிற சூர்யா (24) என்பவர், திடீரென்று கடத்திச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

அதன்பேரில் காவல் ஆய்வாளர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். சிறுமியையும், கார்த்திக் என்கிற சூர்யாவையும் ஆக. 24ம் தேதி மீட்டனர். விசாரணையில், சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, கடத்திச்சென்றதுடன், தனியாக வீடு எடுத்து கணவன், மனைவி போல வசித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, கார்த்திக் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

POCSO Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe