/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arrest-std_8.jpg)
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (30). இவர் கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறுமிக்கு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர், 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தார். அவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததும், அதனால்தான் அவர் கர்ப்பம் அடைந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜெயக்குமாரை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், ஜெயக்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)