/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3268.jpg)
சென்னை வடபழனி அருகே 13 வயது சிறுவன் இயக்கிய கார் தாறுமாறாக ரோட்டில் பாய்ந்த சம்பவத்தில் காயமடைந்த முதியவர் தற்போது சிகிச்சைப்பலனின்றி இறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னைவடபழனியை சேர்ந்தவர் ஷாம்.இவர் தன்னுடைய 13 வயது மகனிடம் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் கார் மீது கவர் போடும்படி தெரிவித்துள்ளார். இதற்காக சிறுவனிடம் காரின் சாவியை கொடுத்துள்ளார். ஆனால் சிறுவன் காரை தந்தையின் அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்று ஓட்டியுள்ளார். அப்பொழுது குமரன் நகர் மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் கார் தாறுமாறாக சென்றது. அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது கார் மோதியது.
இந்த சம்பவத்தில் மகாலிங்கம் என்ற அந்த முதியவர் படுகாயங்களுடன்மீட்கப்பட்டுராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர் சிகிச்சையில் இருந்த முதியவர் மகாலிங்கம் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)