/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arest (1).jpg)
விழுப்புரம்அருகே காதல் தகராறு காரணமாக வீட்டிற்குதீவைக்க முயன்ற 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், பரசுரெட்டி பாளையத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அதே கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவரது மகன்சீதாபதி (22) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே காதலர்கள்இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலனை சந்திப்பதை அந்த இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார். இது சம்பந்தமாக சீதாபதி காதலியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சீதாபதி கடந்த 11ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக அந்த இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விரோதமாக மாறியது. இந்த நிலையில் காதலன் சீதாபதியின் உறவினர்கள் சேர்ந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்.
இதை தட்டிகேட்ட அந்தபெண்ணின் தாயாரை, நரசிம்மன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் வளவனூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்நரசிம்மன் மற்றும் அவரது உறவினர்கள் நாகமணி செல்வமணி உட்பட 13 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)