Advertisment

திமுகவிற்கு ஆதரவை தெரிவித்த 13 அமைப்புகள்..!

13 organizations express support for DMK ..!

தமிழக மக்கள் முன்னணி சார்பில் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அவர்களோடு இணைந்து பணியாற்றக் கூடிய 12 அமைப்புகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளன. “பாஜகவின் அராஜக போக்கைக் கண்டித்து, பாஜக தொடர்ந்து தமிழகத்திற்கு அழைத்து வரும் அநீதிகளைக் கட்டுப்படுத்தவும், மொழி மாநில உரிமைகளை நசுக்கும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில்” திமுகவுக்கு தங்களுடைய ஆதரவை அளிப்பதாக 13 அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

Advertisment

மேலும், “தமிழ்நாட்டின் கனிம வளங்களைச் சூறையாடுவது, வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் உழவர்களை அழிக்கவும், தமிழ்மொழியின் பயன்பாடுகளை தடைபடுத்துகிற வகையில் இந்தி சமஸ்கிருத திணிப்புகளை செய்வதும், இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், ஆளுநர் என்கிற கண்காணியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் அடையாளங்களைக் குழிதோண்டி புதைக்கும் நோக்கிலும்பாஜக செயல்படுகிறது. இந்த பாஜகவை ஆதரிக்கக் கூடிய அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தோற்கடிப்பதற்காக தொடர்ந்து இந்த பதிமூன்று அமைப்புகளும் இந்தத் தேர்தலில் முழுமூச்சாக பணியாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment

elections
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe